வெறும் ட்ரெய்லருக்கு மட்டும் இவ்வளவு செலவா.? மணிரத்னத்தை பார்த்து வாயைப் பிளக்கும் கோலிவுட்!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இயக்குனர் மணிரத்னம் உருவாக்கியுள்ள ஆந்தாலஜி வெப் தொடர் தான் நவரசா.

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கியுள்ள நவரசா ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார். ஒன்பது விதமான உணர்வுகளையும் (நவரசங்களையும்), மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால், இத்தொடருக்கு நவரசா என பெயரிட்டுள்ளனர்.

இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நவரசாவின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த டிரைலர் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை மரியான் படத்தின் இயக்குனர் பரத்பாலா உருவாக்கியுள்ளார். இதற்காக உயர்ரக வெளிநாட்டு கேமிராக்களை கொண்டு சுமார் 70 லட்சம் செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் வெறும் ட்ரெய்லருக்கே 70 லட்சமா என வாயை பிளந்து வருகிறார்கள்.

navarasa
navarasa
- Advertisement -