வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மன்னிப்பு கேட்டாலாம் உன்ன சும்மா உட்ற முடியுமா.? பதஞ்சாலியின் பல்லை புடுங்கிய உச்ச நீதிமன்றம்

Patanjali: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பலவற்றை விற்பனை செய்து வருகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் தரமானது, நோய்களை தீர்க்கும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது.

அது மட்டுமின்றி மருத்துவத்திற்கு எதிரான விளம்பரங்களையும் செய்து வந்தது. இதனால் கடுப்பான இந்திய மருத்துவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் விசாரணையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது போன்ற விளம்பரங்களை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனாலும் பதஞ்சலி சார்பில் இந்த விளம்பரங்களை நிறுத்தவில்லை. இதை அடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பதஞ்சாலியின் பல்லை புடுங்கிய உச்ச நீதிமன்றம்

இதை அடுத்து வந்த விசாரணையில் துருவ் மேத்தா பதஞ்சலி சார்பாக ஆஜராகி நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துள்ளது.

நீங்கள் அலட்சியமாக இருப்பது போல் இந்த விவகாரத்தில் நாங்களும் அலட்சியமாக ஏன் இருக்கக் கூடாது? உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை என கொந்தளித்துள்ளனர்.

மேலும் மத்திய அரசு சார்பில் ஆஜராகி இருந்த அதிகாரிகளுக்கும் சரமாரியாக டோஸ் விழுந்தது. மருந்துகளுக்கான உரிமை வழங்கும் அதிகாரிகளின் வேலை என்ன தெரியுமா? நீங்கள் அதை சரியாக செய்கிறீர்களா?

நீதிபதிகள் கடும் கண்டனம்

பதஞ்சலி நிறுவனத்திற்கு என் துணை போகிறீர்கள்? இதை இப்படியே விட மாட்டோம். அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும் வாய்ப்புள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளனர்.

அது மட்டும் இன்றி பாபா ராம்தேவ் இனி வரப் போகும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இந்த பிரச்சனை அவ்வளவு எளிதில் முடிந்து விடாது என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக மொத்தம் பதஞ்சலிக்கு ஆப்பு வைக்கும் வகையில் இந்த வழக்கு திசை திரும்பி உள்ளது. நீதிபதிகளின் கோபத்திற்கு ஆளான பாபா ராம்தேவ்வின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் தெரியவில்லை.

- Advertisement -

Trending News