ஒரே ஒரு படத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஹீரோயின்.. கிசுகிசுக்கப்பட்ட ஹீரோயினை கண்டுக்காமல் விட்ட விஜய் சேதுபதி

Heroine who is dependent on only one film  and  Vijay Sethupathi did not care: சினிமாவில் நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் என தனக்கு கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரமானாலும், அந்த கதாபாத்திரத்தை தனக்குரிய ஸ்டைலில் மெருகேற்றி வெற்றி பெற வைத்து விடுவார் விஜய் சேதுபதி.

சற்று பின்னோக்கி சென்று பார்த்தால் வார வாரம் விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ் ஆவதை நாம் கண்டிருப்போம். அந்த அளவுக்கு தொடர்ந்து படபடங்களில் கமிட் ஆகி பிசியான ஹீரோவாக இருந்தார்.

இவரை போலே சம்பளத்தில் அதிகம் கறார் காட்டாமல், தயாரிப்பாளர்களின் மினிமம் கேரண்டி ஹீரோயின் ஆக வலம் வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் ஜோடிகளாக நடித்திருந்தனர்.

இருவரும் ஒரே காலகட்டத்தில் வளர்ந்து வந்ததால் அடிக்கடி இவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை எதையும் கண்டு கொள்ளாது தடைகளை தாண்டி முன்னேறி போனார் விஜய் சேதுபதி.

சர்ச்சைகளுக்கு அஞ்சாத இந்த சர்ச்சை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பர்கானா,

சொப்பன சுந்தரி, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்தியன் 2 வை நம்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்படி பிஸியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, இவர் நடித்த படங்கள் டியர் தவிர துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் என பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் பல மாதங்களாக வெயிட்டிங்கில் உள்ளது.

கடைசியாக சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்த இந்தியன் 2 திரைப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இன்றைய சூழலில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்தியன் 2 மட்டுமே பெரிய படமாக இருக்கிறது. அது தவிர மலையாளத்தில் ஒரு படம் பண்ணி கொண்டு இருக்கிறார் அவ்வளவுதான். 

இதனால் எப்போதும் ரசிகர்களிடையே  ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காக வலைதளங்களில் தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்