மாஸ் நடிகரால் வளையல் சிக்கிய ஹீரோக்கள்.. உடும்பு பிடியாக பிடித்த திமிங்கலம்

மாஸ் ஹீரோ ரீ என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறார். அவருடைய ஒரு படம் வசூல் சாதனை படைத்த நிலையில் அடுத்த படத்திற்காக படு பயங்கரமாக தயார் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மாஸ் நடிகரை நம்பி நிறைய சின்ன ஹீரோக்கள் வலையில் சிக்கி உள்ளனர்.

நடிகரின் கம்பேக் படம் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் தான். மேலும் அந்த படத்தில் பல ஹீரோக்கள் நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கி மெருகேற்றி இருந்தார்.

இப்போது இந்த மாஸ் நடிகர் நடிக்கும் அடுத்த படத்திலும் நிறைய சின்ன ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த ஹீரோவின் படத்தில் நடித்தால் கண்டிப்பாக பெரிய உயரத்திற்கு போகலாம் என்ற நம்பிக்கைதான்.

இதை நம்பி ஹீரோக்கள் கமிட்டான நிலையில் மாஸ் நடிகரின் வண்டவாளம் எல்லாம் தெரிந்துவிட்டது. மேலும் படப்பிடிப்பும் மிகவும் தாமதமாகும் என்பதால் இந்த ஹீரோக்களால் வேறு படங்களிலும் கமிட்டாக முடியாது.

இதனால் இப்போது படத்தில் இருந்து வெளியேற நினைத்துள்ளனர் ஹீரோக்கள். ஆனால் உடும்பு பிடிபோல் மாஸ் ஹீரோ அவர்களை வேறு படத்தில் நடிக்காத அளவுக்கு லாக் செய்து வைத்திருக்கிறார். இதனால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்