அழகுக்காக ஆப்பரேஷன் பண்ணிய ஹீரோக்கள்.. ரொமான்ஸ்காக சூப்பர் ஸ்டார் செய்த காரியம்

சினிமா உலகை பொறுத்த வரை நடிகைகள் மட்டுமே தங்கள் அழகாக மாறவும், உடலமைப்பு மாற்றிக்கொள்ளவும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் நடிகர்களும் தங்கள் அழகுக்காக அறுவை சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர். ரஜினி, கமலஹாசன் முதல் துல்கர் சல்மான் வரை நடிகர்களும் அழகுக்காக சில அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ரஜினிகாந்திற்கு இளமை காலம் முதலே புகைபிடிக்கும் பழக்கமும் , மது பழக்கமும் அதிகம் இருந்ததால் அவருடைய உதடுகள் கருத்து போய் அழகற்று போனதால் தனது உதடுகளை மாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

சத்யராஜ்: சத்யராஜிற்கு பற்கள் மிகவும் நீளமாக இருந்ததால், அவர் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆனதும் தனது பற்களை அளவாக சரி செய்து கொண்டதாக சத்யராஜே ஒரு மேடையில் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன்: அல்லு அர்ஜுன் தனது முதல் திரைப்படமான கங்கோத்ரிக்கு பிறகு அவரது முக தோற்றதால் நிராகரிக்கப்பட்டார், பின்னர் அவர் தனது மிகபெரியதாக இருந்ததால் அதனை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டார்.

துல்கர் சல்மான்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், தனது தேர்ந்த நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். ஆரம்ப காலகட்டத்தில் துல்கரின் மூக்கு மிகவும் பெரியதாக இருந்தது, சினிமாவிற்குள் வருவதற்காக துல்கர் சல்மான் தன்னுடைய மூக்கின் வடிவமைப்பை அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றி கொண்டார்.

கமல்ஹாசன்: கமல்ஹாசன் தனது 60 வயதிலும் கட்டுக்கோப்பான உடலுடன் என்றும் இளமையாகவே இருக்கிறார். முகத்தை இளமையாக வைத்திருப்பதற்காக பேஸ் லிப்ட் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும் முக சுருக்கங்கள் வராமல் இருக்க அன்டி ரிங்கில் சிகிச்சையும் செய்து இருக்கிறார்.