ஒரு ஹீரோவுக்கு மற்றொரு நடிகர் பாடிய 5 பாடல்கள்.. சூர்யாவை குத்தாட்டம் போட வைத்த விஜய்

பொதுவாக சினிமாவில் உள்ள ஹீரோக்கள் இடையே சுமூக நட்பு இருந்து வருகிறது. இதனால் ஒரு நடிகருக்கு உதவி செய்யும் வகையில் மற்றொரு ஹீரோ சில விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு நடிகருக்கு மற்றொரு நடிகர் பாடல் பாடி உள்ளனர். அப்படி வெளியான 5 பாடல்களை பார்க்கலாம்.

லிப்ட் : சின்னத்திரையில் இருந்து வந்த கவின் இப்போது வெளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தில் இன்னா மயிலு என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். இருவருமே சின்னத்திரையில் இருந்து வந்ததால் நட்பின் காரணமாக கவினுக்காக சிவகார்த்திகேயன் இந்த பாடலை பாடினார்.

சந்தோஷ் சுப்ரமணியம் : ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இடம்பெற்ற அடடா அடடா என்ற பாடலை நடிகர் சித்தார்த் பாடியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் நா முத்துக்குமார் வரியில் இந்த பாடல் உருவாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது.

வேட்டையாடு விளையாடு : உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நடிகர் நகுல் ஒரு பாடல் பாடியிருந்தார். துப்பாக்கி மட்டும் தோட்டாவை தான் காதலித்தான் என்ற பாடலை அவர் பாடியிருந்தார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஆயிரத்தில் ஒருவன் : செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். தனது அண்ணன் செல்வராகவனின் படம் என்பதால் தனுஷ் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார். அதாவது இந்த படத்தில் இடம்பெற்ற உன் மேல ஆசைதான் என்ற பாடலை தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் ஆண்ட்ரியா பாடியிருந்தனர்.

பெரிய அண்ணா : விஜயகாந்த், சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெரிய அண்ணா. சூர்யாவுக்காக நடிகர் விஜய், நான் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து என்ற பாடலை பாடியிருந்தார். இதில் விஜய்யின் குரலுக்கு சரியான குத்தாட்டம் போட்டிருப்பார் சூர்யா. அதுமட்டுமின்றி இப்போதும் இந்த பாடல் ரசிகர்களை ஆட வைக்கும்.

- Advertisement -