அரசியலில் தான் ஹீரோ சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்.. அடுத்தடுத்து மிரட்டும் 5 கூட்டணி

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் ஆக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இவர் தான் நடிக்கும் படங்களில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் தன்னுடைய நடிப்பை தனியாக தெரிய வைத்து அசத்துபவர்.

திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்தவர் கமல்ஹாசன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கொடுத்த வெற்றி படங்கள் ஏராளம். தற்போது கூட அவருடைய படங்கள் வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன.

இது தவிர வெற்றிமாறன், பா ரஞ்சித், மகேஷ் நாராயணன், மீண்டும் லோகேஷ் கனகராஜ், ஷங்கரின் இந்தியன்-2 போன்ற இயக்குனர்களும் உலக நாயகனை இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த கட்சி 37 இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

அதனை தொடர்ந்து 2021 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் 154 இடங்களில் போட்டியிட்டது. இதில் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 1728 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி பெற்றார்.

மக்களின் குறைகளை கேட்பது, பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வை இடுவது என்று கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட போது உலகநாயகன் ஆட்டோவில் சென்று பொதுமக்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார். ஆனால் கமலஹாசன் வருகிறார் என்று மழைநீரை  வெளியேற்றப்படாமல் 3 மணி நேரம் மக்களை காக்க  வைத்தார் என்று  சர்ச்சையும் கிளம்பியது.

ஆனாலும் அவரால் சினிமாவில் எட்டிய உயரத்தை அரசியலில் எட்ட முடியவில்லை. அரசியல் ஆண்டவருக்கு மட்டும் எட்டாக்கனியாக உள்ளது ஏனோ தெரியவில்லை. வரலாற்றில் ஒரு தலைவன் உருவாக வேண்டும் என்றால் இது போன்ற தோல்விகள் சகஜமே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்