ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தீராத குழப்பம்.. முதலில் வந்தது முட்டையா கோழியா? வரலாறு சொல்றது என்ன?

ஆதிகாலத்தில் இருந்தே நமக்கு குழப்பம் தர கூடிய ஒரு கேள்வி என்றால், “முதலில் வந்தது முட்டையா கோழியா?”-என்ற கேள்வி தான். சிலர் முட்டையில் இருந்து தான் கோழி வந்திருக்கும் என்று சொல்வார்கள். அந்த முட்டையே ஒரு கோழி இட்டது தானே, அப்படியென்றால் கோழி தான் முதலில் வந்திருக்கும் என்று சிலர் வாதிடுவார்கள்.

இதற்கு பதில் அளிப்பது கடினம் என்பதுடன் அதற்கு ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும் என்பதால் யாரிடமும் இந்த கேள்விக்கு விடை இருக்காது என்பது தான் நிஜம். இந்த முட்டை – கோழி கேள்விக்கான பதிலை அறிவியல் பூர்வமாக சில விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். சொல்லப்போனால் டைனோசர் பரிணாம வளர்ச்சி அடைந்து தான் கோழியாக மாறியுள்ளது என்றும் ஒரு சில கூற்றுக்கள் உள்ளன.

இந்த நிலையில், விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், முதலில் 51 புதைபடிவ உயிரினங்களையும், 29 உயிருள்ள உயிரினங்களையும் ஆய்வு செய்தனர். இந்த உயிரினங்களை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்கள் (oviparous). குட்டியிடும் உயிரினங்கள் (viviparous) என வகைப்படுத்தினர்.

முட்டையா கோழியா?

ஜெல்லிமீன்கள் அல்லது புழுக்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் நவீன முட்டைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். விலங்குகள் நிலத்தில் வாழ்வதற்கு முன்பே முட்டைகள் இருந்தன என்பதை இது குறிக்கிறது. முட்டை கோழிக்கு முந்தையது என்ற கருத்தை இந்த ஆய்வு வலுப்படுத்துகிறது.

சொல்லப்போனால், தென்கிழக்கு ஆசியாவில் 1250 BC மற்றும் 1650 BC க்கு இடையில் கோழி வளர்ப்பு நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. இது கோழியின் வயது தோராயமாக 3,500 ஆண்டுகள் என்று கூறுகிறது. இதற்கு நேர்மாறாக, முட்டைகள், குறிப்பாக கடினமான ஓடுகள் கொண்டவை, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உள்ளன. டைனோசர் காலத்திலிருந்து உள்ளது. அதனால் முட்டை தான் எப்படி பார்த்தாலும் பழமையானது என்று கூறுகின்றனர்.

மொத்தத்தில் முட்டை தான் முதலில் வந்தது, அதற்க்கு பின் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து, கோழி, தற்போதுள்ள கோழி முட்டை எல்லாமே உருவானது என்று தான் சொல்லுகிறார்கள். இது இன்றளவும் விவாதமாக உள்ளதே தவிர, சரியான விடை எல்லோரும் ஏற்கும் வண்ணம் யாரும் எந்த பதிலும் தரவில்லை.

- Advertisement -

Trending News