ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. ஹீரோக்களின் ஃபேவரட் ஆக மாறிய வாரிசு நடிகை

வாரிசு நடிகை ஒருவர் இப்போது டாப் நடிகர்களின் படங்களில் புக் ஆகி வருகிறார். இதற்குக் காரணம் அவரது திறமை என்று ஒரு பக்கம் கூறினாலும் வேறு சில விஷயங்களும் இருக்கிறதாம். நடிகையின் அம்மா சினிமாவில் மிகவும் புகழ் பெற்றவர்.

அவருடைய பெயரைக் காப்பாற்ற நடிகையும் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். வாரிசு நடிகை என்பதால் சுலபமாக அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது. மேலும் சினிமாவில் காசு பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் நடிகைக்கு கிடையாதாம்.

ஏனென்றால் இன்னும் பத்து தலைமுறைத் தாண்டி உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு நடிகைக்கு சொத்து இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் இடம் எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நடிகை டிமாண்ட் வைப்பதில்லை. இதனால் அவருக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது.

மற்றொருபுறம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நடிகை இரவு பாட்டி கொண்டாடி வருகிறாராம். இந்த இரவு விருந்து ஹீரோக்களுக்கு பிடித்த வர அடுத்தடுத்த படங்களிலும் இவரை கமிட் செய்து விடுகின்றனர். டாப் ஹீரோக்கள் வாரிசு நடிகையுடன் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார்கள்.

அதேபோல் நடிகையும் தன்னை தேடி வரும் வாய்ப்பை வேண்டாம் என்று சொல்வது இல்லையாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல நடிகைக்கு குறைந்த சம்பளம் என்றாலும் அவருக்கு மவுச அதிகம் உள்ளதை தயாரிப்பாளர்கள் சரியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்