இரண்டாவது காதலரை ஒளித்து வைத்திருக்கும் வாரிசு நடிகை.. காரணம் முதல் காதலாம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் மகள் சமீபகாலமாக காதல் சர்ச்சையில் சிக்கியுள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனைவருக்கும் இவர் காதலர் தான் என்று தெரிந்தாலும் இல்லை என்று கூறி மறுத்து வருகிறாராம் அந்த நடிகை.

தமிழ் சினிமா நடிகரின் மகளாக இருந்தாலும் அம்மணி பிரபலமானது என்னமோ மற்ற மாநிலங்களில் தான். புடவை கட்டிக் கொண்டு தான் நடிப்பேன் என யாரையும் இம்சை செய்யாமல் இயக்குனர் கர்ச்சீப் கொடுத்தாலும் கச்சிதமாக கட்டிக்கொண்டு நடிப்பவர் தான் அந்த நாயகி.

அம்மணிக்கு ஹிந்தியிலும் செம மார்க்கெட் உண்டு. தமிழ் தெலுங்கில் ஓரளவு கிராமர் காட்டி வந்த அந்த வாரிசு நடிகைகள் இந்தியில் மட்டும் தாராளம் காட்டி வருகிறார். அதிலும் ஒருசில படங்களில் உச்சபட்ச உஷ்ணத்தை ஏற்படுத்தும் காட்சிகளில்கூட நடித்து மிரள வைத்துள்ளார்.

அந்த வாரிசு நடிகை கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு வாழ் புகைப்பட கலைஞர் ஒருவரை விரும்பி காதலித்து வந்தாராம். இருவரும் டேட்டிங், மீட்டிங், சாட்டிங் என கொண்டாட்டமாக இருந்து வந்தனர். ஆனால் அந்த கொண்டாட்டம் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் தான் அந்த நடிகை வெளிநாட்டு காதலரை வேண்டாம் என ஒதுங்கி விட்டார். அதன் பிறகு காதல் தோல்வியில் தனிமையில் தள்ளாடி வந்த அந்த வாரிசு நடிகைக்கு சமீபகாலமாக ஒரு டூடுல் கலைஞர் ஆறுதலாக இருந்து வருகிறாராம்.

அம்மணி எங்கு சென்றாலும் துணையாக கூடவே ஒட்டிக் கொள்கிறாராம் அந்த கலைஞர். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய அந்த வாரிசு நடிகை பிறந்தநாள் அன்று அந்த கலைஞருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி தான் காதல் எல்லாம் பொய் என்று கூறியவர் திடீரென ஒருத்தரை கட்டிப் பிடித்துக் கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளாரே என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வந்தனர்.

ஆனால் அந்த கலைஞர் வெறும் நண்பர்தான் எனவும் எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை எனவும் வழக்கம்போல பொய் சொல்லி உள்ளார் அந்த வாரிசு நடிகை. அதற்கு காரணம் முதல் காதலை பெரிய அளவில் பிரபலப்படுத்தி பின்னர் கைகூடாமல் போனதால் ரசிகர்கள் ஏடாகூடமாக கலாய்த்து விட்டார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்