புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கேன்சர், மூல வியாதி, சரும பராமரிப்பு அத்தனைக்கும் ஒரு மீன் போதும்.. கண்டிப்பா வாங்கி சாப்பிடுங்க

மீன் வகைகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் ஒமேகா கொழுப்பு உள்ள மீன்களை சாப்பிடுவதன் மூலம் நிறைய நன்மைகள் இருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு போகும்போது சிக்கன், மட்டன் போன்றவற்றை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.

ஆனால் எந்த நோய்க்குமே மீன் சாப்பிட வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் மீன் வகை உணவுகள் அத்தனை மருத்துவ குணங்கள் வாய்ந்தது. அதிலும் வெள்ளை கிழங்கான் மீன் அதீத மருத்துவ சக்தி கொண்டது. அதன் பயன்களை பற்றி பார்க்கலாம்.

கிழங்கான் மீனில் இரண்டு வகை உண்டு. வெள்ளை கிழங்கான் மற்றும் கருப்பு கிழங்கான். இதில் வெள்ளை கிழங்கான் மீன் தான் குழம்பு வைப்பதற்கு, வறுத்து சாப்பிடுவதற்கும் சுவையானதாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

  • கிழங்கான் மீன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது
  • மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. குளிர்ச்சியை கொடுத்து அதில் இருந்து வெளிவர உதவும்
  • இந்த மீனில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன
  • கிழங்கான் மீன் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த மீன் சாப்பிடுவது புற்றுநோய் வராமல் தடுப்பதோடு, புற்றுநோய் வந்தாலும் அந்த செல்களை அழிக்கும் அளவுக்கு வீரியத்தோடு இருக்கிறது.
  • தோல் அரிப்பு, வறட்சி போன்றவை வராமல் பாதுகாக்கிறது
  • கிழங்கான் மீன் சாப்பிடுவதால் வாத நோய் வராமல் தடுக்கலாம்
  • கிழங்கான் மீனை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதய கோளாறு போன்றவை ஏற்படாது

lady-fish-kelangan-meen
lady-fish-kelangan-meen
- Advertisement -

Trending News