ரஜினியின் செல்வாக்கை, மார்க்கெட்டை புரட்டிப் போட்ட படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1995 இல் வெளியான படம் இது. எப்போதும்போல ரஜினியின் படம் வெளியாவது போல் ஆரவாரத்துடன் வெளியானது.
மும்பையில் டானாக இருக்கும் பாட்ஷா தம்பி, தங்கைகளை காப்பாற்றுவதற்காக தந்தைக்கு வாக்கு கொடுக்கிறார். கொடுத்த வாக்கின்படி சென்னையில் மாணிக்கமாக ஆட்டோ ஓட்டுகிறார். அப்போது மார்க் ஆண்டனி மாணிக்கத்தை கொல்ல முயல்கிறார். ஆனால் மாணிக்கம் மார்க் ஆண்டனியை வீழ்த்துகிறார்.
இப்படத்தில் ரஜினி கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதேபோல் ரகுவரனின் மார்க் ஆண்டனி கதாபாத்திரமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தேவாவின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால் ரஜினிக்கு தன் படங்களில் இரண்டாம் பாகம் நடிப்பதில் விருப்பமில்லை. அது மட்டுமில்லாமல் பாட்ஷா மாதிரி ஒரு படத்தை மீண்டும் பண்ண முடியாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியிருந்தார். இதனால் பாட்ஷா படத்தின் ரீமேக்காவது வருமா என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் பாட்ஷா படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க வேண்டும் என்ற ஆசையை காமெடி நடிகர் கருணாகரன் கூறியுள்ளார். அதாவது அஜித்தால் மட்டுமே பாட்ஷா கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். தற்போது கருணாகரன் கூறிய செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார். அதில் அஜித்தின் நடிப்பு, ஸ்டைல் செட் ஆனதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் ரஜினியின் மாஸ் படமான பாட்ஷா படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் கூறி வருகிறார்கள். மேலும் அஜித் பாட்ஷாவாக நடித்தால் மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.