உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்.. பழசை மறக்காமல் இன்று வரை நெப்போலியன் செய்யும் வேலை

தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து கேரக்டர்களிலும் கலக்கி வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். தற்போது அவர் இந்தியாவை விட்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். அதனால் அவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் ஹாலிவுட் திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறார்.

தன்னுடைய மகனின் மருத்துவத்திற்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் இப்போது அங்கேயே படங்களில் நடிப்பது, விவசாயம் செய்வது என்று வாழ்ந்து வருகிறார். ஆனாலும் இந்தியாவை மறக்காத அவர் அவ்வப்போது இங்கு வந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் சுல்தான், அன்பறிவு ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது.

Also read:வயிற்றில் உள்ள கருவையை கலைத்தார்.. நெப்போலியனை பார்த்து தெரிந்த ஓடிய பெண்

அதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் சென்னைக்கு தன்னுடைய சொத்துக்களை விற்பதற்காக வந்திருந்தார். இனிமேல் அவர் அமெரிக்காவில் தான் இருக்க போகிறார் என்பதால்தான் இந்த முடிவு எடுத்துள்ளாராம். அந்த வகையில் அவர் ராயப்பேட்டையில் இருக்கும் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தை கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்.

மேலும் இங்கு ஹோட்டலில் தங்கியிருந்த அவர் தன்னுடைய பழைய நட்பு வட்டாரங்களை எல்லாம் சந்தித்து மணி கணக்கில் பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னிடம் வேலை செய்தவர்களையும் சந்தித்து அவர்களுக்கான உதவியும் செய்து இருக்கிறார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் சென்னையை விட்டு செல்லும்போது தன்னிடம் வேலை செய்தவர்கள் யாரையும் மறக்கவில்லை.

Also read:கேலி, கிண்டலுக்கு உள்ளான நெப்போலியன்.. வெறிகொண்டு சாதித்து காட்டிய சம்பவம்

வெளிநாட்டுக்கு சென்ற பிறகும் கூட அவர்களுக்கு மாதா மாதம் ஒரு சம்பள தொகையை கொடுத்து வந்திருக்கிறார். அந்த வகையில் ஆரம்பத்தில் 2000 ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் தற்போது 25 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் எந்த வேலையும் செய்யாமலேயே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் தன்னிடம் வேலை செய்த ஒருவரின் மகளின் திருமணத்திற்கு நெப்போலியன் பத்து லட்சம் உதவி செய்திருக்கிறார். இப்படி அவர் பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்த மனம் படைத்தவர் தான்.

Also read:ஹாலிவுட்டையும் ஒரு கை பார்த்த 6 தமிழ் நடிகர்கள்.. இளசுகளை வாயிலும், வயிற்றிலும் அடிக்க செய்த நெப்போலியன்

- Advertisement -