ராஜமௌலியிடம் உதவி இயக்குனரா கத்துக்கோங்க.. மணிரத்தினம், சுஹாசினியை கிழித்து தொங்க விட்ட பிரபலம்

மணிரத்தினம் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக வெளியாகி உள்ளது. அதில் முதல் பாகத்திற்கு கிடைத்ததை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. ஆனாலும் இப்படம் தற்போது வரை 200 கோடி வசூலித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

இருப்பினும் படத்தையும், மணிரத்தினத்தையும் திட்டி தீர்க்காத ஆட்களே கிடையாது. அந்த வகையில் கல்கியின் நாவலில் இருக்கும் முக்கிய அம்சங்களை அவர் தன்னுடைய இஷ்டத்திற்கு மாற்றி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் தன் பங்குக்கு மணிரத்தினம் மற்றும் சுஹாசினியை தாறுமாறாக கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்.

Also read: வசூல் சாதனை படைக்கும் சோழர்கள்.. பொன்னியின் செல்வன் 2 கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்

அதிலும் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டு அவர் பேசியிருக்கிறார். மேலும் மணிரத்தினம், சுஹாசினி இருவரும் ராஜமௌலியிடம் ஆறு மாத காலம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்றும் ஆந்திராவில் அவரிடம் தங்கி படம் எடுப்பது எப்படி என கற்றுக் கொள்ளுங்கள் எனவும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல கதையை வீணடித்து வைத்திருக்கிறார்கள். பாகுபலி கதையே இல்லை என்றாலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் மணிரத்தினம் 500 கோடியை வேஸ்ட் செய்திருக்கிறார். இந்த பணத்தை கோடம்பாக்கத்தில் எனக்கு தெரிந்த உதவி இயக்குனர் ராஜா ஜெயம் என்பவரிடம் கொடுத்தால் அருமையாக படம் எடுத்துக் கொடுப்பார்.

Also read: இளம் குந்தவை இந்த சீரியல் நடிகையின் மகளா.? குடும்பத்துடன் வைரலாகும் புகைப்படம்

அதுவும் 100 கோடியில் இதுபோன்ற நான்கு பிரம்மாண்ட படத்தை எடுத்துக் கொடுத்து விடுவார் என்றும் அவர் மணிரத்தினத்தை காட்டமாக விமர்சித்துள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து சிலர் ஆதங்கத்திலும், ஏமாற்றத்திலும் கருத்துக்களை தெரிவித்தாலும் இதுபோன்று மோசமாக விமர்சிக்கவில்லை.

ஏனென்றால் இப்படத்தை பாகுபலியோடு ஒப்பிட வேண்டாம் என்று ஏற்கனவே பட குழு தெரிவித்து இருந்தது. ஆனாலும் சரித்திர கதை என்றாலே பலரும் பாகுபலியை மட்டும் தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். அதனாலேயே இது போன்ற கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என மணிரத்தினத்திற்கு ஆதரவாக பல கருத்துக்கள் இப்போது எழுந்து வருகிறது.

Also read: புலிகளின் வேட்டைக்கு தயாரான சூழ்ச்சிக்காரர்கள்.. பரபரப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்