ஒரு வழியா சொந்த ஊர் பொண்ணுடன் ஜோடி போடும் ஹரிஷ் கல்யாண்.. உதடு பத்திரம் மேடம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ வழியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஹரீஷ் கல்யான். பிக்பாஸ் ஷோவுக்கு வருவதற்கு முன்பே இவர் சிந்து சமவெளி, அரிது அரிது உட்பட சில படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் மார்க்கெட் வேறலெவலுக்கு சென்றது.

பிக்பாஸுக்கு பிறகு நடித்த பியார் பிரேம காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், தாராள பிரபு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

ஓமணப்பெண்ணே ஹரீஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்த படத்திற்காக பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போட்டோக்கள் இணையத்தில் வைரலனாது.

காரணம் முதல் போட்டோ தளபதி ரஜினி கெட்டப்பிலும், இரண்டாம் போட்டோ சிகப்பு ரோஜாக்கள் கமல் போலவும் இருந்ததால் தானாம். இப்படியாக படத்தின் அடுத்தடுத்த தேதிகள் குறிப்பிடாத நிலையில் OTT-யில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இளன் இயக்கத்திலான முதல் படம் “கிரகணம்” இதே போல் டிராப் செய்யப்பட்டது. அந்த புராஜெக்ட் டிராப்பான நிலையில் அடுத்த படம் குறித்த அப்டேட் வரவே ‘காதல் கண் கட்டுதே’ நாயகி அதுல்யா ரவியுடன் இணைகிறார் ஹரீஷ் கல்யான்.

athulya ravi
athulya ravi