சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஹரால்டு தாஸுக்கு சம்மந்தியாகிய காமெடி நடிகர்.. காது காதுமாய் ரகசியமாய் நடந்த மகளின் நிச்சயதார்த்தம்

Arjun Daughter’s engagement:  பொதுவாக சினிமாவில் ஒன்றாக நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தான் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக நடிகர்களின் வாரிசுகள் காதல் வயப்பட்டு திருமணத்தை நோக்கி போகிறார்கள். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியும் பல மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இவர்களுடைய காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்ததே அர்ஜுன் தான் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வேயர் ஷோவை தொகுத்து வழங்கி வரும்பொழுது அதில் ஒரு போட்டியாளராக தான் உமாபதி பங்கேற்றார். அப்பொழுது அர்ஜுனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தினால் குடும்ப நண்பர்களாக மாறினார்கள்.

அதன் பின்னரே ஐஸ்வர்யா மற்றும் உமா பதியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிந்த பின்பு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் உடனே பெற்றோர்கள் அவர்களுடைய சம்மதத்தை கொடுத்து விட்டார்கள். அதனால் இன்று இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

இந்த நிச்சயதார்த்தம் தற்போது சென்னையில் உள்ள கிருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து நடைபெறுகிறது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் தான் அழைப்பு கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தாமல் காதும் காதுமாக வச்சு மிக எளிமையான முறையில் நடந்து வருகிறது.

இருந்தாலும் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் இவர்களுடைய திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக சினிமா துறையில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு கோலாகலமாக நடத்துவதற்கு அர்ஜுன் ஏற்பாடு பண்ணி இருக்கிறார்.

அதே நேரத்தில் தம்பி ராமையாவின் மகன் உமா பதியும் ஹீரோ மற்றும் இயக்குனர் என்று சினிமாவில் இவருடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் இவருடைய பயணம் மென்மேலும் வளருவதற்காக எல்லா உதவியும் செய்வதற்கு அர்ஜுன் தயாராக இருக்கிறார். அதனால் சீக்கிரமாகவே கல்யாணத்தை முடித்துவிட்டு மறுபடியும் உமாபதி ஹீரோ மற்றும் இயக்குனர் என்று புது அவதாரத்துடன் ஜொலிக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News