ரகசியமாக 2ம் திருமணத்தை முடித்த தனி ஒருவன் பட நடிகர்.. முதல் மனைவியை கழட்டிவிட்ட காரணம்

தமிழ் சினிமாவில் பல வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். நிறைய திரைப் படங்களில் நடித்திருந்தாலும் தனி ஒருவன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து அவர் தொடரி, டோரா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அமிர்தா கல்யாண்பூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். இந்த ஜோடி திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து.

2019 ல் விவாகரத்து பெற்று பிரிந்த ஹரிஷ் உத்தமன் சில நாட்களுக்கு முன் மலையாள நடிகை சின்னு குருவில்லாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கேரளாவில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

தற்போது இவருடைய முதல் திருமணத்தை பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது ஹரிஷ் உத்தமன் தற்போது சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் நடித்து வருவதால் இவர் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கிறார்.

இந்த பிரபலத்தால்தான் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகையை திருமணம் செய்ததும் இந்த காரணத்திற்காக தான். சினிமா துறையில் உயர்ந்து விட்ட காரணத்தால் அவர் காதலித்த பெண்ணை ஒரு வருடத்திலேயே கழட்டி விட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

harish-uthaman
harish-uthaman
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்