11 வருடம் கழித்து இயக்கி, நடிக்கும் பிரபுதேவாவின் சிஷ்யன்.. லட்டு மாதிரி அமைந்த ஹீரோயின்.!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார். இவர் நடன இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது நடிகராக வளர்ந்துள்ளார். தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள ஹரிகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.

அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தை ராம் ஜெய் புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்திகுமார் தயாரிக்கிறார். ஹரிகுமாருடன் இணைந்து ஜான் விஜய், சக்திகுமார், சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படம் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை போலவே தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வரும் பிரபுதேவாவிடம் ஹரிகுமார் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்த ஹரிகுமார் அவரது குரு பிரபுதேவாவை வைத்தே தேள் என்ற படத்தை இயக்கினார்.

harikumar
harikumar

சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து விலகி இருந்த ஹரிகுமார் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. விரைவில் படம் குறித்த முழு விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

harikumar
harikumar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்