ஹர்திக் பாண்டியா தான் எனக்கு ரோல் மாடல்.. வெளிப்படையாய் உண்மையை சொன்ன அதிரடி வீரர்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வெகு சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. எப்பொழுதும் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை சற்று மோசமாக சொதப்பி வருகின்றது.

இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை அணி எந்த ஒரு போட்டியும் வெல்லவில்லை. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இனிமேல் நடக்க வரும் போட்டிகளில் சுதாரித்து வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஐபிஎல் போட்டிகளில் எப்பொழுதுமே அதிரடி வீரர்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு அந்த வகையில் வெளிநாட்டு அதிரடி வீரர்களுக்கும், உள்ளூர் அதிரடி வீரர்களுக்கும் எப்பொழுதுமே தனி மாஸ் தான்.

அந்த வகையில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15.26 கோடிகள் ஏலம் போன அதிரடி வீரர் இசான் கிசான், தனக்கு ரோல் மாடல் ஹர்திக் பாண்டியா தான்பி என்று கூறியுள்ளார். அவர் மூலம்தான் அதிரடியாக ஆடவே கற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு பந்துகளையும் எப்படி அடிக்கவேண்டும், உடம்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், ஒரு போட்டிக்கு எப்படி தயாராக வேண்டும் என்று பல நுணுக்கங்களை தனக்கு கற்றுக் கொடுத்ததாக தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி உணவு பழக்கங்களை இஷன் கிஷன் மதிப்பதே கிடையாதாம். ஹர்திக் பாண்டியா தான் தனக்கு கட்டுப்பாடுகளை சொல்லிக்கொடுத்து ஊக்குவித்தார். இப்படி இருந்தால் தான் அணியின் உன்னை சேர்ப்பார்கள் என்றும் அறிவுரை கூறியதாக இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.