ஓய்வு பெறும் முடிவில் ரவீந்திர ஜடேஜா. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

இந்திய அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜா தற்போது இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டார் .

ஜடேஜா முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்திய அணி, அடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள தென்னாப்பிரிக்கா தொடரில் பங்குபெற முடியாது. இந்திய அணி வருகிற 16 ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ள வீரர்கள் பெயர் பட்டியலில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் அளவு பெரிதாக இருப்பதால் ,அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியதிருக்கும். அதனால் அவர் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Ravi-Cinemapettai-1.jpg
Ravi-Cinemapettai-1.jpg

ஏற்கனவே ஜடேஜாவிற்கு 33 வயதாகிறது இன்னும் ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் அவர் அணிக்கு திரும்புவது மிகவும் கடினம். இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு அறிவிக்கப்படலாம் எனவும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 17 அரைச் சதங்களுடன் 2,195 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சிலும் 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் இந்திய அணி அடுத்து பங்குபெரும் தென்னாப்பிரிக்கா,இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களில் இருந்து ஜடேஜா விலக வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்