ஹர்பஜன் சிங்கின் பிரண்ட்ஷிப் படத்தில் இருந்து வெளியான புதிய பாடல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்தியாவின் முன்னாள் சுழல் சூறாவறி ஹர்பஜன் சிங் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் அறிந்த ஒன்று.இவர் ராபின் சிங் சவுரவ் கங்குலி ராகுல் டிராவிட் தோணி உள்ளிட்டோர் கேப்டன்ஷிப்பின் கீழ் ஒன் டே டெஸ்ட் டி20 என எல்லாம் விளையாடியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றபோது ஹர்பஜன் மற்றும் ப்ராவோ விக்கெட் எடுத்த பிறகு போடும் ஆட்டம் ரசிகர்களை கவரும். இப்படியாக கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரமான ஹர்பஜன் இப்போது “ப்ரண்ட்ஷிப்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கும் இபபடத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். இது இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.

இந்த படத்தின் சிங்கிள் டிராக் ரிலிசாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. லிரிக்கல் ஆடியோ சாங்காகா வெளியான இந்த வீடியோ சில நடன மூமண்டுகளையும் காட்டியுள்ளது.

அதில் சுழல் மன்னன் ஹர்பஜன் ஸ்டெப்கள் பிரித்துள்ளார். தமிழ் தெலுங்கு இந்தியில் வெளியாகவிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை விதைத்துள்ளது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -