குரங்கு கையில் கிடைத்த பூமாலை.. காதல் கணவரால் கமல் பட நடிகைக்கு நடந்த கொடுமை

80களில் இருந்து இப்போது வரை தன்னுடைய  ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் உலக நாயகன் கமலஹாசன். அதிலும் 1985 ஆம் ஆண்டில் வெளியான மங்கம்மா சபதம் என்ற படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன் இணைந்து நடித்திருப்பார்.

இந்த படத்தில் கமலஹாசன் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் சுஜாதா தன்னுடைய மகனை துணிச்சலுடன் வளர்த்தெடுக்க கூடிய தாயாக நடித்து அசத்தினார்.  இது மட்டுமல்ல 80களில் வெளியான நிறைய படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அதில் எல்லாம் தன்னுடைய பல்வேறு உணர்ச்சிகளை சித்தரிப்பதில் நிதானம் மற்றும் நுணுக்கமான நடிப்பை வெளிக்காட்டுபவர்.

Also Read: பாலச்சந்தர், நாகேஷுக்கு ஏற்பட்ட சண்டை.. அவரால் கொலைவெறியில் சுற்றிய கமல்

அது மட்டுமல்ல அவருடைய கண், மான் கண் போல அவ்வளவு அழகாக இருக்கும். இவரை திரையில் ரசிக்காதவர்கள் எவரும் இலர். இவரை மக்கள் தங்களது குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே பார்த்தனர். அதனால்தான் இவரைக் குறித்த எந்த கிசுகிசுப்பும் வந்ததில்லை. இப்படிப்பட்டவர் எப்படி இப்படி ஒரு அரக்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

நடிகை  சுஜாதாவிற்கு நடிக்க பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் குடும்பத்தை எதிர்த்து காதலித்தவரை கரம் பிடித்தார். ஆனால் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் சுஜாதா திருமணம் செய்து கொண்ட ஜெயகர் அவரை படாத பாடுபடுத்தினார். பணத்திற்காக படத்தில் இப்படி நடி, அப்படி நடி என பல கண்டிஷன்களை போட்டு கொடுமைப்படுத்தினார். ஆண் ஆதிக்க மனம் கொண்ட ஜெயகரை சுஜாதா எப்படி காதலித்தார் என்பதுதான் புரியாத புதிர்.

Also Read: ஹீரோக்களை கதறவிட்ட டேனியல் பாலாஜியின் 5 படங்கள்.. அமுதனாக உலக நாயகனையே பதறடித்த வில்லன்

அதுமட்டுமல்ல சுஜாதா தன் வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பெனி நடத்திக் கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தார். ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் ஜெயகர் பெல்டால் அடிக்கும் சத்தமும் வலி தாங்க முடியாமல் அவர் அழுது கொண்டு கதறும் சத்தத்தையும் எதிர்வீட்டில் குடியிருந்த நடிகை குட்டி பத்மினிக்கு கேட்டிருக்கிறது. உடனே குட்டி பத்மினியும் அவருடைய அம்மாவை அழைத்துக் கொண்டு ஜெயகரை அடிக்க விடாமல் தடுத்தனர்.

அப்போது சுஜாதா எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டே நின்று கொண்டிருந்தாராம். இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த வீட்டை காலி செய்துவிட்டு சுஜாதாவை ஜெயகர் அழைத்துக் கொண்டு எங்கேயோ சென்றுவிட்டாராம். அவர் இறந்த செய்தி கூட யாருக்கும் தெரியவில்லை. ஒரு சில நடிகர்கள் மட்டுமே சுஜாதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள் என்று நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் பேட்டி ஒன்றில்  உருக்கமாக பேசியிருந்தார்.

Also Read: சன்னியாசிகவே வாழ்ந்து வரும் முரட்டு வில்லன்.. உலகநாயகனை பதறடித்த 47 வயது மோசமான நடிகர்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -