வத்தலும் தொத்தலுமாக மாறிய ஹன்சிகா.. உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நாயகி ஹன்சிகா மோத்வானி. தற்போது கேட்பாரற்று கிடக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அறிமுகம் ஆன புதிதிலேயே தனது கொழுக் மொழுக் தேகத்தினால் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா என ஜோடி போட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறி வந்தார். தெலுங்கிலும் இவரது மார்க்கெட் ஏறுமுகம்தான். இடையில் சிம்புவுடன் காதல் கிசுகிசு வேறு ஏற்பட்டது.

ஆனால் சமீபகாலமாக ஹன்சிகாவை கண்டுகொள்ள ஆளில்லாமல் தவித்து வருகிறார். இளம் நடிகர்களுடன் ஜோடி போடுவதற்காக தனது உடம்பை பாதியாக குறைத்ததால் வந்த விளைவு என்கிறார்கள் ரசிகர்கள். ஹன்சிகாவிடம் அதிகமாக ரசிகர்கள் விரும்பியது அந்த குண்டான உடம்பை தான்.

ஆனால் உடல் எடையை குறைத்த பிறகு எலும்பும் தோலுமாய் நோய் வந்த மாதிரி ஆகிவிட்டார் நம்ம ஹன்சிகா. பார்க்கவே பரிதாபமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

hansika-motwani
hansika-motwani

ஹன்சிகா வேண்டுமென்றே உடல் எடையை குறைத்தார் அல்லது அவர்கள் உடலில் ஏதேனும் பிரச்சனையா என நான்கு பேர் கொண்ட குழு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் விடை கிடைக்கும் என நம்பலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்