சாதனை படைத்த ஹன்சிகா பட டீசர்.. அப்படி என்ன சாதனை!

இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் மஹா. இப்படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் கலக்கி உள்ள இப்படத்தில், சிம்பு, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பிராமையா, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சிம்பு முதலில் கெஸ்ட் ரோலுக்காகத்தான் அழைக்கப்பட்டார். பின்னர் சிம்புவுக்கு படம் மீதிருந்த ஈடுபாட்டை பார்த்து அவரது காட்சிகள் நீட்டிக்கப்பட்டது. அவருக்காக காதல் பாடல் ஒன்றும் வைக்கப்பட்டது.

ஹன்சிகாவின் 50வது படமான மகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இப்படத்தின் டீசர் வெளியானது. டீசர் ஆரம்பிக்கும் போதே மொத்த தமிழ்நாட்டு போலீஸ் கண்ணுலையும் ஒருத்தன் விரலைவிட்டு ஆட்டுறான் என ஆக்ரோஷமான குரலில் தொடங்கும். க்ரைம், த்ரில்லிங், ஆக்சன் என டீசரை மிரட்டி இருப்பார்கள்.

maha-teaser
maha-teaser

டீசர் வெளியான வெறும் மூன்றே நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்துள்ளது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் மகா படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் படத்தின் ட்ரெயலர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -