வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஏமாற்றிய சிம்பு.. அதள பாதாளத்தில் தள்ளி விடப்பட்ட ஹன்சிகா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹன்சிகா மகா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் இந்த படம் அவருக்கு 50 வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. அவர் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை யு ஆர் ஜமீல் என்பவர் இயக்கி இருக்கிறார்.

மேலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா ஆகியோரும் இதில் நடித்திருக்கின்றனர். காதலித்து பிரேக் அப் செய்து கொண்ட சிம்பு மற்றும் ஹன்சிகா இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த மகா திரைப்படம் பூர்த்தி செய்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் சிம்பு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் 40 நிமிடங்களுக்கு வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தை பார்த்தால் முதல் பாதியில் 10 நிமிடமும், இரண்டாம் பாதியில் 10 நிமிடம் தான் அவர் வருகிறார். இதுவே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த கதையில் வேகம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதனால் கதை நன்றாக இருந்தும் ராட்சசன் திரைப்படம் போல் வரவேண்டிய இந்த திரைப்படம் சில தொய்வுகளின் காரணமாக ரசிகர்களை கவர தவறிவிட்டது.

கதைப்படி சிம்பு, ஹன்சிகாவின் குழந்தையை ஒரு சைக்கோ கொலைகாரன் கடத்தி விடுகிறார். அதிலிருந்து தன்னுடைய குழந்தையை ஹன்சிகா காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் கதை. ஒரு அம்மாவாக ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் பல காட்சிகள் சரியாக விளக்கப்படாதது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனால் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். மேலும் ஹன்சிகா, ஸ்ரீகாந்த் போன்றவர்களுக்கு இப்போது திரைத்துறையில் அதிக மவுசு இல்லை. அதுவும் படத்தின் இந்த தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் ஹன்சிகாவின் இந்த 50 ஆவது திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

- Advertisement -

Trending News