முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேரும் சின்ன குஷ்பு.. உடம்ப குறைச்சதிலும் ஒரு பிரயோஜனம் இருக்கு!

இசையமைப்பாளராக தனது பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமான நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றது.

முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ள விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். அதில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

simbu-hansika-maha-cinemapettai
simbu-hansika-maha-cinemapettai

இந்நிலையில் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கால்ஷீட் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்று வருகிறது.

முதன்முதலாக விஜய் ஆண்டனியுடன், ஹன்சிகா இணைந்து நடிக்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹன்சிகா தற்போது அவரது 50வது படமான மஹா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் நடிகர் சிம்பு கெளரவ வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

hansika-glamour-photo
hansika-glamour-photo
- Advertisement -