புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

எச் வினோத்துக்கு கடிவாளம் போடும் ஹீரோக்கள்.. என் வளர்ச்சியை தடுப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்

H.Vinoth – KH233: இயக்குனர் எச் வினோத் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களை இயக்கிய இயக்குனர்களில் ஒருவர். ஆனால் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் அளவுக்கு எச் வினோத்துக்கு பெயரும் புகழும் கிடைக்கவில்லை. அஜித், கமலஹாசன் என அடுத்தடுத்து ஜாம்பவான்களை இயக்கினாலும் ரசிகர்களின் மனதில் அவ்வளவாக பரீட்சயம் ஆகாமல் தான் இருக்கிறார்.

தன்னுடைய முதல் படமான சதுரங்க வேட்டை மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். அதேபோன்று நடிகர் கார்த்தியின் ஹிட் படங்களின் லிஸ்டில் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படமும் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இவர் இயக்கிய படங்கள் முந்தைய படங்களின் அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை.

இயக்குனர் எச் வினோத்திற்கு நடிகர் அஜித்குமார் குறுகிய காலத்திலேயே வாய்ப்புக் கொடுத்திருந்தாலும், பிங்க் என்னும் இந்தி படத்தின் ரிமேக் கதையை தான் கொடுத்தார். இதனால் அவருடைய இயக்கம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதேபோன்றுதான் வலிமை படமும் எதிர்பார்த்த அளவுக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.

எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் எச் வினோத் துணிவு படத்தை இயக்கியிருந்தார். இப்படி அவருடைய கேரியரில் அடுத்தடுத்து இயக்கிய மூன்று படத்திலும் அஜித் குமாரின் அழுத்தம் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. அதேபோன்று கமலஹாசனை வைத்து இயக்க இருக்கும் KH 233 படத்திற்கு வினோத் கொடுத்த கதையே வேறு.

ஆனால் கமல் வேறொரு கதையை கொடுத்துவிட்டு அதை இயக்க சொல்லி விட்டாராம். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலும், அங்கு சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்கும் நிலைமையில் எச் வினோத் இல்லை. இதனாலேயே ரசிகர்கள் அவர் சமீப காலமாக இயக்கும் படங்கள் முந்தைய படங்களைப் போல் இல்லை என குறைபட்டு வருகிறார்கள்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என்ற வரிசையில் அடுத்தடுத்து தன்னுடைய வித்தியாசமான கதைகளை கொடுத்து லோகேஷ் கனகராஜ் அளவுக்கு வந்திருக்க வேண்டிய இயக்குனர் தான் எச் வினோத். ஆனால் முன்னணி ஹீரோக்கள் அவரை அழைத்து வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் அவருடைய சுதந்திரமான கதை களத்திற்கு கடிவாளம் போட்டு வருகிறார்கள்.

- Advertisement -

Trending News