உண்மை கதையை வைத்து கெத்து காமிச்ச வினோத்.. வலிமை படத்தை பார்த்து அசந்துபோன அஜித்

அஜித் நடித்த வலிமை படத்தினை பற்றிய தகவல்தான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு தகவல் வெளியானாலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் பற்றியே கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வலிமை படத்திலிருந்து வெளியான கிலிம்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் வேற லெவல் இருக்கும் எனக் கூறிவந்தனர். அதுவும் அஜித் ஓட்டும் பைக் காட்சி திரையரங்கில் தெறிக்க விடுவோம் என சபதம்மிட்டு வந்தனர். இதனால் போனிகபூர் மகிழ்ச்சியில் இருந்தார்.

தற்போது வினோத் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய முதல் படமான சதுரங்கவேட்டை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வெளியானது. அதேபோல் வட மாநிலத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு தீரன் படம் வெளியானது. இந்த 2 படங்களுமே கதையிலும் சரி, கதாபாத்திரத்தின் சரி தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

ajith-vinoth-cinemapettai
ajith-vinoth-cinemapettai

அதேபோல்தான் வலிமை படமும் இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு இடையே பை ரேஸில் நடக்கும் ஊழல்களை பற்றிய கதைதான் என கூறிவருகின்றனர். மேலும் வலிமை படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியையும் உண்மை சம்பவத்துடன் ஒப்பிட்டு வினோத் இயக்க உள்ளதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த உண்மை சம்பவங்கள் அனைத்தும் மிகபெரிய சர்ச்சையை வெளிநாடுகளில் உருவாக்கியதாம்.

சும்மா விடுவாரா நம்ம வினோத். வெளிநாடுக்குதான் அது பழசு நமக்கு அது புதுசா இருக்குமாம். மேலும் வினோத் எப்போதும் தனது படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ஆரவாரத்தோடு கொண்டு செல்வார். அதுவும் இப்படம் பைக் காட்சிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் திரைக்கதை சுவாரசியமாக இருக்கும் என கூறி வருகின்றனர். முழு படத்தையும் பார்த்த அஜித் அசந்து போய்விட்டாராம். அதனால்தான் அடுத்த படத்திற்கு யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்