துணிவுக்கு பின் லோகேஷ் உடன் நேரடியாக மோதும் எச் வினோத்.. யாரும் எதிர்பார்க்காத மெர்சல் கூட்டணி

இயக்குனர் எச் வினோத் தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்கள் இயக்கி முடித்துள்ளார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதால், தல ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் பனையூரில் ரசிகர்களை சந்தித்து பேசியிருந்தார். அதே இடத்தில் ரகசியமாக வினோத் ரகசியமாக விஜயை சந்தித்தாக கூறப்படுகிறது. துணிவு படம் முழுக்க முழுக்க எச் வினோத்தின் படமாகவே இருக்கும் அதேபோல் ஒரு கதையை விஜய்யிடம் கூறியிருக்கிறாராம்.

Also Read: விஜய்க்கு சம்பளம் 100 கோடி.. அவரை தூக்கி விட்ட இயக்குனரோ தெருக்கோடி

விஜய்க்கு மட்டும் இந்த கதை கண்டிப்பாக பிடித்துப் போனால் நிச்சயம் இவர்களது கூட்டணியில் படம் உருவாக உறுதியாகிவிடும். அந்தப் படத்திற்கான வேலைகள் அனைத்தும் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்போது விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தை துணிவு படத்துடன் பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார். இதனால் 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் விஜய் நேருக்கு நேர் மோதி கொள்கிறார் என்பதால் கோலிவுட்டில் இந்த வருட பொங்கல் ரணகளமாக இருக்கப் போகிறது.

Also Read: வெளிப்படையாக விஜய்க்கு எதிராக களத்தில் இறங்கிய அஜித்.. இயக்குனரின் அனுமதி இல்லாமல் செய்த வேலை

எனவே வாரிசு படத்திற்குப் பிறகு இப்போது விஜய் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

ஏனென்றால் வாரிசு படம் பக்கா செண்டிமெண்ட் படம் என ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆகையால் விஜய்யை மீண்டும் மாஸ் ஹீரோவாக தளபதி 67 படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எனவே துணிவுக்கு பின் போதும் லோகேஷ் உடன் நேரடியாக மோதும் வினோத், விஜய் கூட்டணியில் உருவாகும் புது படத்தின் மெர்சல் ஆன அப்டேட்டை விரைவில் அதிகாரப்பூர் அறிவுப்புடன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: விஜய் கொடுத்த தரமான 5 லவ் ஹிட்ஸ்.. காதலுக்காக எதுவும் செய்யலாம் என இளசுகளை தூண்டிய படங்கள்

- Advertisement -