Rebel Movie Review – ஆக்ரோஷமான ஜிவி பிரகாஷின் ரெபல் எப்படி இருக்கு? தமிழன், மலையாளிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவம்

Rebel Movie Review : 80களில் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ரெபல் படம். நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

சாக்லேட் பாயாக நடித்த வந்த ஜிவி பிரகாஷ் சமீபகாலமாக ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மூணாறில் தமிழ் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்லூரி படிப்பதற்காக கேரளாவுக்கு செல்கின்றனர்.

அந்த கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என தமிழர்களாக உள்ளவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள். ஆனால் அதில் மலையாளியாக உள்ள மமிதா பைஜுக்கு ஜிவி பிரகாஷ் மீது காதல் ஏற்படுகிறது. மேலும் மலையாளிகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் ஜிவி பிரகாஷ் அவர்களை எதிர்த்து போராடுகிறார்.

தமிழனுக்காக போராடும் ஜிவி பிரகாஷ்

தமிழனாக பிறந்தால் தப்பா, திருப்பி அடிக்கலாம் என்ற நிலைக்கு வருகிறார். கடைசியில் அவருக்கு நியாயம் கிடைத்ததா? காதல் கைகூடியதா? என்பதுதான் ரெபல். இந்தப் படத்தின் டைட்டிலே பலருக்கு நெருடலாக உள்ளது. அதாவது ரெபல் என்றால் புரட்சிகரமான ஒருவர்.

ஆனாலும் தமிழருக்காக போராடும் கதையைக் கொண்டு ஆங்கிலத்தில் டைட்டில் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் உண்மைச் சம்பவமாக எடுக்கப்பட்டிருந்தாலும் இயக்குனர் ரசிகர்களை சுவாரஸ்யமாக சில விஷயங்களை கொண்டு வந்து இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

ரெபல் படத்தின் பிளஸ் ஆக ஜிவி பிரகாஷின் நடிப்பு மற்றும் இசை பக்காவாக பொருந்தி இருக்கிறது. பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த மமிதா பைஜு இந்த படத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். இளைய தலைமுறையினரை கவரும் படமாக ரெபல் அமைந்துள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5/5

Next Story

- Advertisement -