மதயானை கூட்டத்துடன் மல்லுக்கெட்டும் ஜிவி பிரகாஷ்.. கிராபிக்ஸில் சொதப்பிய கள்வன் டிரைலர்

Kalvan Movie Trailer: ஜிவி பிரகாஷ் காட்டில் இப்போது அதிர்ஷ்ட மழை தான் வெளுத்து கட்டுகிறது. நேற்று தான் அவர் நடித்த ரெபல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

ஜிவி பிரகாஷ் குரலில் மீண்டும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல் அந்த படத்தின் பெரிய பாசிட்டிவ் விஷயமாக அமைந்தது. படம் ரிலீஸ் ஆகி ஒரு நாளுக்குள்ளேயே அவர் நடித்த அடுத்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் பி வி ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த படம் தான் கள்வன். இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து படமாக்கப்பட்டு வந்தது. படம் முழுக்க சத்தியமங்கலம் காட்டுப்பகுதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்று இருக்கிறது. கள்வன் படத்தின் டிரைலரை பார்க்கும்போது கும்கி படம் தான் நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தில் ஹீரோ காதலுக்காக காட்டு யானையை எதிர்கொள்ளுவார்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு திருட்டுக்காக காட்டு யானையை எதிர்கொள்கிறார். வீடியோவின் ஆரம்பத்திலேயே காட்டு யானை ஊருக்குள் ஊடுருவி விட்டதால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு வருகிறது.

வனத்துறை அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு காட்டுப் பகுதி வழியாக வியாபாரம் செய்வது போல் முதலில் காட்டப்படுகிறது. ஆனால் ஒரு திருட்டு வேலைக்காக தான் ஜிவி பிரகாஷ் அது போன்ற ஒரு செட்டப்பில் நடிக்கிறார்.

பாரதிராஜா மற்றும் இவானாவின் முகங்கள் அங்கங்கே பிரிந்தாலும் இருவருக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருப்பது புரிகிறது. காட்டு யானை தாக்குதல், அழகான காதல், ஜிவி பிரகாஷ் போட்டிருக்கும் திட்டம் இதுதான் இந்த படத்தின் கதை.

கிராபிக்ஸில் சொதப்பிய கள்வன் டிரைலர்

ட்ரைலரின் முடிவில் ஏதோ ஒரு வழியில் ஜிவி பிரகாஷ் காட்டு யானையிடம் சிக்கிக் கொள்வது போல் காட்டப்படுகிறது. காட்டு யானை மற்றும் அவருக்கு இடையே நடக்கும் மோதல்தான் கிளைமாக்ஸ் போல் தெரிகிறது.

ஆனால் இதில் அந்த யானையுடன் சண்டை போடும் காட்சி முழுக்க கிராபிக்ஸ் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இது கொஞ்சம் படத்தை சொதப்ப வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்