மாணவிக்காக ஜிவி பிரகாஷ் செய்த செயல்.. குவிந்து வரும் பாராட்டுகள்.

தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது படங்களை விட இவரது பாடல்களுக்கே ரசிகர்கள் அதிகம். அந்த அளவிற்கு ஜிவி இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.

தற்போது தமிழ் சினிமாவில் படங்களுக்கு நிகராக வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

இந்த வெப் சீரிஸின் டைட்டில் சாங்கை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் சாங்கை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

gv-prakash-01
gv-prakash-01

ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே என உற்சாக துள்ளலுடன் தொடங்கும் இந்த பாடல் வரிகளை நித்திஷ் எழுதியுள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ள ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு சந்தோஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் ஜி.வி.பிரகாஷை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -