நான் 18 பிளஸ் படங்களில் நடிக்கிறேனா.. ஜிவி பிரகாஷ் விளக்கம்

சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜி வி பிரகாஷ். இவர் இசை நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் பேச்சுலர் படம் ரிலீசாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஜெயில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர், போஸ்டர் முதலானவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் படக் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தற்போது ஒரு பேட்டியில் ஜி வி பிரகாஷிடம் உங்கள் படங்கள் 18 பிளஸ் படங்களாக இருக்கும் என்ற ஒரு பிம்பம் நிலவுகிறது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் த்ரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர் இந்த திரைப்படங்கள் மட்டுமே கொஞ்சம் ரொமான்டிக்காக இருந்தது. மற்றபடி என்னுடைய திரைப்படங்கள் அப்படி இல்லை. இதுவரை நான் 19 படங்களில் நடித்திருக்கிறேன்.

ஒருவேளை அப்படி இருந்திருந்தால் என்னுடைய ஜெயில் படம் அந்த பிம்பத்தை நிச்சயம் மாற்றி அமைக்கும். நான் இதுவரை சோஷியல் மீடியாவில் பல சமூக கருத்துகளை கூறி இருக்கிறேன். ஜெயில் படம் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்து சொல்லும் படமாக இருக்கும்.

இதன்மூலம் அவர் தன்னைப் பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது நடிப்பில் படு பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் ஆயிரம் ஜென்மங்கள் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் மாறுபட்ட நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயில் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்