குட் நைட் படத்தின் அடுத்த வெர்ஷன் தான் டியர்.. ரிலீசுக்கு முன்பே பிரச்சனையை சந்திக்கும் ஜிவி பிரகாஷ்

good-night-dear
good-night-dear

GV Prakash : கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது குட் நைட் படம். இப்படத்தில் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அதாவது இந்த படத்தில் கதாநாயகன் குறட்டையால் என்ன என்ன பிரச்சனையை சந்திக்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதுவும் குறிப்பாக மனைவிக்கு ஏற்படும் சிரமத்தை வைத்து கதை எடுக்கப்பட்டிருந்தது.

இப்போது ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் டியர் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த சூழலில் படத்தின் டிரைலரில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

டியர் படத்திற்கு வந்த சிக்கல்

ஆகையால் இந்த படம் குட் நைட் படத்தின் அடுத்த வெர்ஷன் ஆக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது குட் நைட் மற்றும் டியர் இரண்டு படங்களுமே 2022 இல் பூஜை போடப்பட்டது.

ஆனால் குட் நைட் படம் முந்திக்கொண்டு 2023 இல் வெளியாகிவிட்டது. இதனால் இப்போது டியர் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. குட் நைட் படத்தின் காபி தான் டியர் என்ற விமர்சனங்களும் வருகிறது.

இதனால் ஜிவி பிரகாஷின் டியர் படம் ரிலீசுக்கு முன்பே பிரச்சனையை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்பாக இவரது நடிப்பில் வெளியான ரெபல் மற்றும் கள்வன் படங்கள் பெரிய அளவில் போகாத நிலையில் டீயர் படத்தை பெரிதும் நம்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner