விஜய் சேதுபதி பட நடிகையை தட்டி தூக்கி ஜிவி பிரகாஷ்.. அதிரடியாக வெளிவந்த அப்டேட்!

தமிழ் சினிமாவில் கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சீனுராமசாமி. இவரது படங்கள் எதார்த்தமாகவும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் கொண்டிருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜிவி.பிரகாஷை வைத்து சீனுராமசாமி பெயரிடப்படாத புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை முபாரக் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.

gayathrie shankar
gayathrie shankar

படம் குறித்து பேசிய சீனுராமசாமி, “ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் கதை களத்தை முதல்முறையாக கிராமத்தில் உருவாக்கியுள்ளோம். ஆண்டிப்பட்டி, தேனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்” என கூறியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படத்திற்கான வியாபாரம் தொடங்கி விட்டது. இரண்டு ஓ.டி.டி., நிறுவனங்கள் பேசி வருகின்றனர். படத்தை எதில் வெளியிடுவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என சீனு ராமசாமி கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ஷங்கர்நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் இப்படத்தில் நர்சாக நடிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காயத்ரி ஏற்கனவே சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -