ஜீவி பிரகாஷின் அசாத்திய திறமை.. புகழ்ந்து தள்ளியது யார் தெரியுமா?

ஜிவி பிரகாஷ் நல்ல திறமையுள்ள இசையமைப்பாளர். இளம் வயதிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குசேலன் படத்திற்கு இசையமைத்தார். அதுமட்டுமில்லாமல் ஆடுகளம், மதராசபட்டினம், அசுரன் என ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முத்திரையை ஆழமாகப் பதித்தவர். இசையமைப்பதில் கில்லாடி ஜிவி பிரகாஷ்.

ஆரம்பத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற இரண்டு படங்களும் வெற்றி பெற்றுவிட்டது. இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி நல்ல நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியை போல் ஜீவி பிரகாஷும் வெளுத்து வாங்குறார்.

எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று இல்லாமல் சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதிலும் தாய்மார்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். ஜீவி பிரகாஷின் ரூட்டு தனி ரூட்டுதான். இப்படியே போனால் ஜிவி பிரகாஷ் வேற லெவலில் செல்வார்.

சமீபத்தில் வெளிவரபோகும் ஜெயில் படத்தின் பிரஸ் மீட் நடந்தது. அதில் வசந்த பாலன் ஜீவி பிரகாஷ் பற்றி கூறுவது; வெயில் படத்தில் நடித்த பசுபதியை பார்த்து மிரண்டு போனேன். இப்போது ஜீவியின் நடிப்பர்த்து மிரண்டு போனேன். பதினேழு வயதில் அவரின் திறமையை கணித்தேன் என்னுடைய கணிப்பு பொய் ஆகவில்லை என்று புகழ்ந்து தள்ளி விட்டார்.

ஜீவி-யின் இசை மட்டும் அல்ல அவருடைய நடிப்பிலும் பெரிய உச்சம் அடைவார் என்பது மட்டும் உறுதி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்