ஜிவி பிரகாஷ்காக மிரட்டலான தலைப்பு வைத்த சீனுராமசாமி.. படக் குழுவில் இருந்து வெளியான அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் பென்சில் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, குப்பத்து ராஜா, சர்வமும் தாளமயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஒரு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்த ஜிவியால் நடிகராக கால்பதிக்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. அதுமட்டுமின்றி இவரது நடிப்பும் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை. ஆனால் இவரது இசையை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

இந்நிலையில் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடிகை காயத்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இடிமுழக்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் தலைப்பை கேட்டாலே ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்குமென ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.

இயக்குனர் சீனு ராமசாமி இதுவரை மண்வாசனை கலந்த மென்மையான கதைகளை மட்டுமே கையாண்டு வந்துள்ளார். ஆனால் இந்த முறை ஒரு முழு ஆக்ஷன் படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் நடிகர் ஜிவி பிரகாசும் முதல் முறையாக ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் மற்றும் நடிகர் இருவருமே முதல்முறையாக ஒரு புதிய முயற்சியை எடுக்க உள்ளனர். இது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.