குணா படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததற்கு காரணம் இவர் தானாம்.. முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடிய படமாக அமைந்தது குணா திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் இவரது பெயரும் புகழும் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

ஆனால் முதன் முதலில் குணா படத்திற்கு ‘மதிகெட்டான் சோலை’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பெயர் ரொம்ப நெகட்டிவ் பெயராக இருப்பதால் பின்பு குணா என்று மாற்றியுள்ளனர்.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ரோஷினி அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஒரு படத்தில் நடித்திருந்தாலும் கமலுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இப்படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

guna
guna

ஆனால் அந்த நடிகைக்கு டப்பிங் பேசியது நடிகை சரிதா. கொடைக்கானலில் உள்ள ஒரு குகையில் இப்படத்தின் சூட்டிங் நடைபெற்றது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றதால் பின்பு அந்த குகைக்கு குணா படத்தின் பெயரை வைத்து குணா குகை என அழைக்கப்பட்டது.

இப்படத்தில் நடித்த நடிகை அதன்பிறகு எங்கே போனார் என்ன ஆனார் என்று கூட யாருக்கும் தெரியவில்லை, இவ்வளவு ஏன் குணா படத்தின் கதை எழுதியவருக்கு கூட தெரியவில்லையாம்.

ரசிகர்களின் பேராதரவு பெற்ற குணா திரைப்படம் வசூல் ரீதியாக சற்று சரிந்தது. அதற்கு காரணம் குணா படத்திற்கு இணையாக ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் தான் காரணம்.

வசூல் ரீதியாக தளபதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக அப்போது குணா திரைப்படம் ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்