விராட் கோலியை மாறி மாறி அடிக்கும் பிசிசிஐ.. ஆதரவுக் குரல் எழுப்பிய பாகிஸ்தான் வீரர்

20 ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட்கோலி மற்ற இரு பார்மட்டிற்கும் கேப்டனாக தொடர மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விடுவித்தது.

நடந்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார் கோலி. இதன் மூலமாக பிசிசிஐக்கும், விராட் கோலிக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவுக்கு பிசிசிஐ தான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்திற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இது விராத் கோலியின் தனிப்பட்ட முடிவு என்றும், அதனால் வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா இல்லாததால், கே எல்,ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி பதவியில் இருந்து விலகியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி கருத்துக் கூறியுள்ளார்.

Sahid
Sahid

அப்ரிடி, கிரிக்கெட்டின் ஒரு கட்டத்தில் கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் அத்தகைய சூழ்நிலை அனைவருக்கும் வரும். மேலும் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு கேப்டனாக இருந்து விட்டார் என்றும், தற்போது அவர் தன்னுடைய ஆரம்பகால ஆட்டத்தை போல், கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்