பிரமாண்டமான மாஸ்டர் செஃப் கிராண்ட் ஃபினாலே.. டைட்டில் வின்னர் இவரா?

சமையல் கலையை மையமாக கொண்டு சன் டிவியில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கூடிய நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். இந்நிகழ்ச்சியில் ஆண், பெண் இருபாலருமே கலந்து கொண்டனர். தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடைபெற்று வருகிற மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கு பெறக்கூடிய சமையல் வல்லுநர்கள், தங்களின் தனித்திறமையை தக்க தருணத்தில் நிரூபித்தாக வேண்டும்.

இவர்களுக்கென பலவிதமான டாஸ்க்குகள் நடைபெற்றது. உதாரணமாக இந்த சமையல் வல்லுனர்களுக்கு, பூக்களைக் கொண்டு சமைக்க வேண்டும் என்ற டாஸ்க்கு கூட வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தங்களின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். அதில் வெற்றி பெறக்கூடிய போட்டியாளருக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாகவும், மாஸ்டர் செஃப் என்கின்ற ட்ராப்பியும், அவர்களுக்கு சொந்தமாக அவர்களின் பெயர் பதித்த செஃப் கோட் ஆகிய அனைத்தும் இந்நிகழ்ச்சி வாயிலாக வெற்றியாளருக்கு வழங்கப்படும்.

தற்போது 14 போட்டியாளர்களில் 10 பேர் அடுத்தடுத்த ரவுண்டுகளில் எலிமினேட் ஆகி, மீதமுள்ள நால்வர் மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். தேர்வாகியுள்ள 4 போட்டியாளர்களும் பெண்களே என்பது ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது.

வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா ஆகிய நால்வரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் வின்னி மற்றும் தேவகி ஆகிய இருவருமே பலம்வாய்ந்த போட்டியாளர்கள் என்று கூறப்படுகிறது.

மக்கள் தரப்பில் தேவகியே வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராண்ட் ஃபினாலேவில் வெற்றியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்