புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர்கள். ஏனென்றால் இவர்களுக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு போகும் வாய்ப்பும் சுலபமாக கிடைக்கிறது. மேலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே பிரபலங்கள் தான் அடிக்கடி கலந்து கொள்வார்கள்.

தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிக ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக ஜி பி முத்து உள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமான இவருக்கு தற்போது ஏகபோக வரவேற்பு கிடைத்த வருகிறது. இவருடைய வெளந்தியான பேச்சு மற்றும் பாவனை அனைவரையும் ஈர்த்துள்ளது.

Also Read :கமலுடன் போட்டி போடும் ஜி பி முத்து.. டாப் ஹீரோயின்களுக்கு போடும் ஸ்கெட்ச்

இந்நிலையில் ஜி பி முத்து இடம் சக போட்டியாளரான மகாலட்சுமி விஜய் டிவியில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காத ஜி பி முத்து மாகாபா அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.

மேலும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று ஜிபி முத்து சொல்லி உள்ளார். விஜய் டிவியில் உள்ள பல நட்சத்திரங்கள் மாகாபா தனக்கு உதவி செய்ததை கூறியுள்ளார்கள். ஏனென்றால் நல்ல திறமையான ஒருவரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மாகாபா ஆனந்த் பல பேருக்கு உதவி செய்து வருகிறார்.

Also Read :ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

மாகாபா பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக மாகாபா உள்ளார். இவருடைய கலகலப்பான பேச்சு மற்றும் ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறையாமல் கடைசி வரை எடுத்துச் செல்வது என நிறைய திறமையை உள்ளடக்கியுள்ளார்.

மாகாபா வெள்ளி திரையில் இரண்டு, மூன்று படங்கள் நடித்து இருந்தாலும் அங்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரையிலேயே பயணித்து வருகிறார். ஆனால் வெளித்திரையில் ஒரு ஹீரோவுக்கு உண்டான ரசிகர் மாகாபாவுக்கும் உள்ளனர். இவரின் சிறந்த குணத்திற்காகவே பலரும் இவரை நேசிக்கிறார்கள்.

Also Read :ஹீரோக்களை மிஞ்சும் மாகாபாவின் சொத்து மதிப்பு.. வாயை பிளந்து பார்க்கும் கோலிவுட்

- Advertisement -

Trending News