கனத்த இதயத்துடன் வெளியேறும் ஜி பி முத்து.. கண்ணீர் மழையில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியளராக இந்த சீசனில் வலம் வந்தவர் ஜிபி முத்து. பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் மற்றும் அனைத்து வேலைகளிலும் தனது முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வந்தார். ரசிகர்களை தினமும் என்டர்டைன்மென்ட் செய்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

தலைவன் என்று ஜி பி முத்துவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர்தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் தனது மகனைப் பிரிந்து அவரால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை. ஏற்கனவே பிக் பாஸ் இடம் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Also Read :தாமரை இடத்தை பிடிக்க நினைத்தவருக்கு ஆப்படித்த ஆண்டவர்.. முதலாவதாக கெட் அவுட்டான போட்டியாளர்

ஆனால் உங்களுக்கு வெளியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது என்று பிக் பாஸ் விதிகளை மீறி அவர் சொன்ன பிறகு ஜிபி முத்து தனது முடிவை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் இன்று உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.

அப்போது ஜி பி முத்துவை கண்பக்சன் ரூமுக்கு அழைத்து கமல்ஹாசன் பேசுகிறார். எனது மகனைப் பிரிந்து இங்கு இருக்க முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுகிறார் ஜி பி முத்து. உங்களுக்கு வெளியில எவ்வளவு கைதட்டல் கிடைக்கிறது என்பதை பாருங்கள். இதையெல்லாம் பார்த்து உங்களது மகன் விஷ்ணு வெளியில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

Also Read :பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுத்த கமல்

மேலும் அவன் நீங்கள் பிக் பாஸ் பட்டத்துடன் வெளியே வர வேண்டும் என காத்திருக்கிறான் என்று ஆண்டவர் நிறைய அறிவுரை சொல்கிறார். ஆனால் வெளந்தியான மனம் உடைய ஜி பி முத்துவால் தனது மகனை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்.

இதனால் இன்று கனத்த இதயத்துடன் ஜிபி முத்து வெளியேற இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மழையில் உரைகிறார்கள். பிக் பாஸ் வீட்டிலிருந்த ஜி பி முத்து வெளியேறி உள்ளதால் இனி விஜய் டிவியின் டிஆர்பி குறைய அதிக வாய்ப்புள்ளது.

Also Read :பிக் பாஸ் அசீம் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா.. வெளியான வைரல் புகைப்படம்

- Advertisement -