விஜய் மற்றும் ரஜினி என்னை பார்த்து நடுங்குவதற்கு காரணம் இதுதான்.. வெளிப்படையாக கூறிய கௌதம் மேனன்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே காதல் காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவரது படத்தில் பெண்கள் அழகாக காட்டுவது மட்டுமில்லாமல் ரொமன்ஸ் காட்சிகளிலும் அழகாக காட்டியிருப்பார்.

இதுவரைக்கும் சிம்பு, சூர்யா மற்றும் அஜித் போன்ற நடிகர்களுடன் படங்களில் கௌதம் மேனன் பணியாற்றியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று விடும் .

சமீபகாலமாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவது பற்றி பேசினாலே நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடுங்கி விடுகின்றனர். அந்த அளவிற்கு இவர் இயக்கும் படங்கள் வெளிவருவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன.

சமீபத்தில் கௌதம் மேனனிடம் பல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஏன் விஜய் மற்றும் ரஜினியை வைத்து படங்களை இயக்கவில்லை என கேட்டபோது அதற்கு கவுதம் மேனன் நான் தயாராக தான் உள்ளேன், ஆனால் அவர்கள் தான் தயாராக இல்லை என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் ரஜினி என் படத்தில் நடித்தால் அது அவர்கள் படமாக இருக்காது. கண்டிப்பாக என்னுடைய படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறுவார்கள். அதனாலேயே அவர்கள் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு பயப்படுகிறார்கள் என கூறினார்.

- Advertisement -