தி லெஜன்ட் பட ரிலீசுக்கு 4 மாவட்டங்களில் அரசு விடுமுறை.. மாஸ் காட்டும் அண்ணாச்சி!

மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அப்படம் வரும் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகிறது. எதையுமே பிரம்மாண்டமாக செய்யும் அண்ணாச்சி இந்த படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பிரம்மாண்டமாக செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே வியந்து போகும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது அண்ணாச்சி பட ரிலீஸ் அன்று தமிழக அரசு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

அதாவது வரும் 28ஆம் தேதி அன்று சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. அதில் பல விளையாட்டு வீரர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் அன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் என்ற காரணத்தினால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத விஷயம் தற்போது அண்ணாச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவருடைய படத்திற்கு இது இலவச விளம்பரமாகவும் மாறியுள்ளது.

இந்த விஷயத்தை பற்றி தற்போது பலரும் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் உண்மையில் அவர் படத்துக்காக விடுமுறை அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கிண்டல் அடித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் அண்ணாச்சியின் பர்பாமன்ஸை காண அன்று தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்