வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மிரட்டிய கௌதம் கார்த்திக், கலங்க வைத்த புகழ்.. ஆகஸ்ட் 16 1947 எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

பொன்குமார் இயக்கத்தில் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவான ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. கௌதம் கார்த்திக், புகழ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் சுதந்திர காலகட்ட மக்களின் வாழ்க்கையை தெளிவாக காட்டி இருக்கிறது. தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ள இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காண்போம்.

திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் செங்காடு என்னும் மலை கிராமத்தில் இருக்கும் மக்கள் பருத்தியிலிருந்து நூல் தயாரிக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் மணிக்கணக்கில் வேலை வாங்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆங்கிலேய அதிகாரி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததை மக்களிடமிருந்து மறைக்கிறார்.

Also read: பத்து தல அடுத்து 1947 கௌதம் கார்த்திக்கு கை கொடுக்குமா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அவருடைய மகன் பார்க்கும் பெண்களை எல்லாம் அடைய நினைக்கும் கொடூரன். அவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஜமீன் பெண்ணையும் அவர் அடைய நினைக்கிறார். அதிலிருந்து அப்பெண்ணை காப்பாற்றும் கௌதம் கார்த்திக் ஆங்கிலேய அதிகாரியை எதிர்த்து நிற்கிறார். இறுதியில் என்ன நடந்தது, சுதந்திரம் கிடைத்தது அந்த கிராம மக்களுக்கு தெரிந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.

அறிமுக இயக்குனராக இருந்தாலும் சுதந்திரத்திற்கு முன்பான காலத்தை அப்படியே கண் முன் காட்டிய பொன்குமார் அனைவரையும் வியக்க வைக்கிறார். சுதந்திர காலகட்டத்தை பற்றிய பல திரைப்படங்களை நாம் பார்த்திருந்தாலும் இதில் காட்டப்பட்டிருக்கும் தத்ரூபம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான். இதைத் தாண்டி பரமனாக வரும் கௌதம் கார்த்திக் மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நிச்சயம் இப்படம் அவருக்கான ஒரு அடையாளமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு அடுத்தபடியாக விஜய் டிவி புகழ் அனைவரையும் கண்கலங்க வைத்து விடுகிறார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களில் காமெடி என்ற பெயரில் ஏதாவது ஒரு கூத்து நடத்துவார். ஆனால் இப்படத்தில் அதை எல்லாம் ஓரங்கட்டி விட்டு குணச்சித்திர வேடத்தில் நம்மை அசர வைத்துள்ளார்.

Also read: விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்திக்.. இந்த படமாச்சு ஹிட் ஆகணும் ஆத்தா!

அதைத்தொடர்ந்து புதுமுக நடிகை ரேவதியும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். இப்படி அனைத்து கதாபாத்திரங்களும் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தான் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அதேபோன்று பின்னணி இசையும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் பாடல்களில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் சுதந்திரம் கிடைத்த விஷயம் மக்களுக்கு எப்போது தெரியவரும் என்ற ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அழுத்தமாக கொடுப்பதில் இயக்குனர் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். ஆக மொத்தம் விறுவிறுப்பான திரை கதையும், கதையோடு ஒன்றிய கதாபாத்திரங்களும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் இப்படம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒரு படமாக இருக்கிறது.

Also read: நல்ல வாய்ப்பு கிடைத்தும் கௌதம் கார்த்திக்கு ஓடாத 5 படங்கள்.. அப்பா அளவிற்கு வளர முடியாமல் போன துரதிர்ஷ்டம்

- Advertisement -

Trending News