தனுஷ் அப்பாவை கண்டபடி திட்டிய கவுண்டமணி.. உண்மையை ஓபனாக சொன்ன பிரபலம்

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறார் தனுஷ். தனுஷின் ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் அவரது தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா.

அவரை கவுண்டமணி ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் கண்டபடி திட்டியதாக நடன இயக்குனரும் பிரபல நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனுஷின் சூப்பர் ஹிட் பாடலான மன்மதராசா பாடலுக்கு நடனம் அமைத்தவர் இவர்தான்.

கவுண்டமணி நடிக்கும் ஒரு படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியபோது கவுண்டமணி மன்மத ராசா பாடல் பற்றி அவரிடம் பேசினாராம். அப்போது மன்மத ராசா பாடல் கவுண்டமணிக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினாராம்.

அதனைத் தொடர்ந்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவை கொஞ்சம் கேவலமாகவே திட்டி விட்டார் என்று கூறினார் சிவசங்கர் மாஸ்டர். அவர் கூறியதாவது, இந்த கஸ்தூரிராஜா இருக்கானே, அவனுக்கு உங்கள மாதிரி மாஸ்டர் இருக்கிறதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா.

என் முன்னாடியே பாம்பே மாஸ்டர் வேண்டுமென தேடுறான், நான் கூட நம்ம சிவசங்கர் மாஸ்டர் இருக்கிறாரே என்று சொன்னேன், ஆனா அதுக்கு கஸ்தூரி ராஜா, இல்ல சார், பையன் தனுஷ் ஆசைப்படுறாப்புல என நெளிந்தாராம்.

பையன் கேட்டா எதுனாலும் கொடுத்துடுவியா என்று சிவசங்கர் மாஸ்டருக்காக சப்போர்ட் செய்து பேசியதாகவும் அதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறியிருந்தார் சிவசங்கர்.

சிவசங்கர் நடன இயக்குனர் மட்டும் இல்லாமல் சந்தானம் நடித்த கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது காமெடிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.

kasturi-raja-dhanush-cinemapettai
kasturi-raja-dhanush-cinemapettai
- Advertisement -