கவுண்டமணியை கலாய்த்து பேசிய ஒரே நடிகை.. இவங்களும் சாதாரண ஆளே கிடையாது

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் கவுண்டமணி. கவுண்டமணி பொருத்தவரை எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை நக்கலாகவும், கிண்டலாகவும் பேசுவது போல்தான் அவரது காட்சிகள் இருக்கும்.

ஆரம்பத்தில் இதற்கு ஒரு சில நடிகர்கள் மறுப்பு தெரிவித்தாலும் அதன்பிறகு கவுண்டமணியின் காமெடி ரசிகர்களுக்கு பிடித்துப்போக அனைத்து நடிகர்களும் இதனை ஏற்றுக் கொண்டனர்.

கவுண்டமணி தான் பலர் நடிகர்களை கலாய்த்து பேசியுள்ளார். ஆனால் கவுண்டமணியை கலாய்த்து பேசிய ஒரே நடிகை மனோரமா என சினிமா பிரபலங்கள் பலரும் கூறியுள்ளனர்.

ஆனால் கவுண்டமணி மனோரமா நடிப்பில் இடம்பெற்ற காட்சிகளில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப மனோரமா நக்கலாக கவுண்டமணியை கிண்டல் செய்வார். இதுவரைக்கும் கவுண்டமணியை சத்யராஜ் தவிர வேறு யாரும் நக்கலாக பேசியது கிடையாது.

அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி மற்றும் மனோரமா இருவரும் காமெடியில் கலக்க கூடியவர்கள் என்பதால் இவர்களுக்குள் இருக்கும் நக்கலான பேச்சு அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துப் போனது.

இவர்கள் இணைந்து நடிக்கும் அனைத்து படங்களிலுமே மாறி மாறி நக்கலாக பேசிக்கொள்வார்கள். இவர்களது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலுமே காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்