கவுண்டமணி பெஸ்ட் சக்ஸஸ்ஃபுல் 5 ஹீரோக்கள்.. செந்திலுக்கே டஃப் கொடுத்த சத்யராஜ்

தமிழ் சினிமாவில் 70களில் இருந்து ஈடு இணையற்ற காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் செந்திலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் மூலம் அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. செந்தில் மட்டுமல்ல, அவருக்கே கொடுக்கும் வகையில் சத்யராஜ் உள்ளிட்ட டாப் 5 நடிகர்களின் காம்போ பக்கமாக ஒர்க் அவுட் ஆகி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சத்யராஜ்: தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமான சத்யராஜ், அதன் பிறகு 80களில் டாப் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இவருடைய கோயம்புத்தூர் குசும்புத்தனமான பேச்சை கேட்பதற்கென்றே இவருடைய படங்களை திரையரங்கில் ரசிகர்கள் பார்ப்பதற்கு குவிவார்கள். அதிலும் முறைமாமன், குங்கும பொட்டு கவுண்டர், மலபார் போலீஸ், வால்டர் வெற்றிவேல் போன்ற படங்களில் சத்யராஜ்-கவுண்டமணியுடன் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

அந்த அளவிற்கு திரையரங்கில் கவுண்டமணி மற்றும் சத்யராஜ் இருவரின் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தனர். கவுண்டமணி- செந்தில் காம்போவிற்கு பயங்கர டஃப் கொடுக்கும் வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்துக் கொண்டிருந்தனர்.

கார்த்திக்: கவுண்டமணியின் லொள்ளு பேச்சுக்கு ஈடு கொடுத்து நடித்த அடுத்த நடிகர் தான் கார்த்திக். இவர்களது காம்போவில் வெளியான படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவரும் ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் 1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா இணைந்து நடித்த உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தில் கவுண்டமணி நவரச நாயகனுடன் செம்மையா லூட்டி அடித்திருப்பார்.

Also Read: சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் நடிகை.. 150 படங்கள் நடித்தும் கவுண்டமணி லவ்வர் படும் பாடு

பிரபு: சிவாஜி கணேசனின் மகனாக சினிமாவில் ரவுண்டு கட்டிய பிரபு கவுண்டமணியுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். சின்னத் தம்பி, மிஸ்டர். மெட்ராஸ், பெரிய குடும்பம் போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து கலக்கிய காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விஜயகாந்த்: சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த விஜயகாந்த் 90களில் கதாநாயகனாக ஹிட் கொடுத்த பல படங்களில் கவுண்டமணி இணைந்து நடித்து கலக்கி இருப்பார். இவர்களது காம்போவில் வெளியான கோயில் காளை, சின்ன கவுண்டர், சேதுபதி ஐபிஎஸ், பெரிய மருது போன்ற சூப்பர் ஹிட் படங்களில் இவர்களது காமெடி காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கும்.

Also Read: வடிவேலு எண்ட்ரியால் காண்டான கவுண்டமணி.. நெஞ்சிலேயே மிதித்து விரட்டிய சம்பவம்

பிரசாந்த்: இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரசாந்த் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து சில படங்களில் மட்டுமே நடித்திருப்பார். ஆனால் இவர்கள் இருவரின் காம்போவில் 1997 ஆம் ஆண்டு மன்னவா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் கவுண்டமணியுடன் பிரசாந்த் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

இவ்வாறு இந்த 5 பிரபலங்கள்தான் கவுண்டமணியுடன் பெஸ்ட் சக்சஸ்ஃபுல் கொடுத்த ஹீரோக்கள். அதிலும் செந்திலுக்கு பயங்கர டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய கோயம்புத்தூர் குசும்புத்தனமான பேச்சால் சத்யராஜ் அடித்த லூட்டியை ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

Also Read: காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து வெற்றி கண்ட 8 ஹீரோக்கள்.. அரசியல்வாதியாக மிரட்டி விட்ட கவுண்டமணி

Sharing Is Caring:

அதிகம் படித்தவை