மனம் மாறிய சர்ச்சை நடிகர்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அந்த சர்ச்சை நடிகர். இவர் இருக்கும் இடத்திலும் சரி, இவர் நடிக்கும் படத்திலும் சரி சர்ச்சைக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.

சர்ச்சை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் நடிகரின் நடவடிக்கையால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கடுப்பாகி வந்தனர். காரணம் அந்த சர்ச்சை நடிகர் சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வரவே மாட்டாராம். அப்படியே வந்தாலும் ஒழுங்காக படப்பிடிப்பில் பங்கேற்காமல் டைம் பாஸ் செய்து வந்துள்ளார்.

நடிகரின் இந்த நடவடிக்கையால் பலமுறை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடிகருக்கும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அது மட்டுமின்றி தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்ததால் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நடிகர் இருந்தார்.

அந்த சமயத்தில் தான் அவருக்கு ஒரு படம் கைகொடுத்தது. சமீபத்தில் நடிகர் நடிப்பில் வெளியான அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றி காரணமாக நடிகருக்கு கைநழுவி சென்ற வாய்ப்புகள் மீண்டும் கிடைத்தன. நடிகரும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் திடீரென அதிரடியாக ஒரு முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதன்படி இனிமேல் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக பாதி தொகையை மட்டும் வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம். இதுவரை அதிக சம்பளம், வீட்டிற்கு தனி, தனக்கு தனி என்று சம்பளம் என்று வாங்கி வந்த நடிகரின் இந்த மன மாற்றத்தால் தயாரிப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை