Good Night Movie Review – குறட்டையால் படாத பாடுபடும் மோட்டார் மோகன்.. குட் நைட் பட முழு விமர்சனம்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ், ஜெகன் கிருஷ்ணா மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் குட் நைட். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் என்டர்டைன்மென்ட் படமாக வெளியாகி உள்ளது.

கதை சுருக்கம் என்னவென்றால் குறட்டையால் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான். இதில் மோட்டார் மோகன் என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு தான் தூங்கும் நேரத்தில் குறட்டை விடும் பிரச்சனை இருக்கிறது.

Also Read : பிரதீப்பை ஓரங்கட்ட போகும் மணிகண்டன்.. ஆர்ப்பாட்டம் இல்லாத ஹிட்டுக்கு ரெடியாகும் குட்நைட்

இதனால் தன் வேலை பார்க்கும் அலுவலகம், நண்பர்கள் மற்றும் காதலியிடம் பல அவமானங்களை சந்திக்கிறார். அதுமட்டுமின்றி இந்த குறட்டை பிரச்சினையால் தன்னுடைய காதலியை பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அதன் பிறகு கதாநாயகி மீதா ரகுநாதை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்வதற்கு முன்பு வரை கணவர் குறட்டை விடுவார் என்பது கதாநாயகிக்கு தெரியாது. போதாக்குறைக்கு இவருக்கு சத்தம் என்றாலே ஆகாதாம். இந்நிலையில் மோட்டார் மோகன் முதல் இரவு அன்றே நன்கு குறட்டை விட்டு தூங்குகிறார். இதனால் மனைவி மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறார்.

Also Read : முதல் இரவில் குறட்டை விட்டு தூங்கிய மணிகண்டன்.. கலக்கலான காமெடி உருவான குட் நைட்

ஒவ்வொரு இரவும் இதே போல் பிரச்சனையை சந்திக்கிறார். கடைசியில் இவர்களது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதுதான் குட் நைட். இப்படம் முழுக்க முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் இந்த படத்திலும் மணிகண்டன் மோட்டார் மோகனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மோகன் மற்றும் ரமேஷ் பாலா இடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மேலும் படத்திற்கு பிளஸ் என்றால் குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்கலாம். அதுமட்டுமின்றி படத்தில் எந்த ரெட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளும் பயன்படுத்தவில்லை. மோசமான காட்சிகளும் இடம்பெறவில்லை.

குட் நைட் படத்திற்கு இசை மட்டும் குறையாக தெரிகிறது. அன்றாட வாழ்வில் குறட்டையால் ஒருவர் படும் அவதியை அப்படியே கண்முன் குட் நைட் படம் காட்டி இருக்கிறது. கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்த்து மகிழலாம். மேலும் குறட்டையில் இவ்வளவு அழகான படத்தை கொடுக்க முடியுமா என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் விநாயக்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5

Also Read : குழந்தைகளை வைத்து அதிரிபுதிரி ஹிட் அடித்த 5 படங்கள்.. கம்மி பட்ஜெட்டில் பட்டையை கிளப்பிய மணிரத்தினம்

Next Story

- Advertisement -